நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட கால்நடை மருத்துவமனையுடன் கூடிய மருந்தகத்தில் மருந்துகள் இல்லாததால் கால்நடை வளர்ப்போர் பெரும் அவதி!


கடலூர் மாவட்டம்,நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட சரவணபுரம் சாலையில் மருந்தகத்துடன் கூடிய கால்நடை மருத்துவமனை உள்ளது.இங்கு நெல்லிக்குப்பம் நகராட்சியை சுற்றியுள்ள 30வார்டுகளிலும் உள்ள மக்கள் தங்கள் வீட்டில் வளர்க்கப்படும் ஆடு,மாடு, மற்றும் செல்ல பிராணிகளான பூனை,நாய் உள்ளிட்ட பல்வேறு கால்நடைகளுக்கு மருத்துவம் செய்து வருகின்றனர். ஆனால் மருத்துவ மனையில் போதிய மருந்துகள் இல்லாததால் கடலூர் வரை சென்று தனியார் மருத்துவமனைகளில் மருந்துகள் வாங்கி வந்து மருத்துவம் பார்க்கப்படுகிறது. மேலும் கால்நடைகளின் மருத்துவம் குறித்தும் நோய் குறித்தும் சரியான தகவல்களை மருத்துவர்கள் தர மறுக்கிறார்கள். தனியார் மருத்துவமனைக்கும் , தனியார் மருந்தகங்களுக்கும் பணிபுரியும் மருத்துவர் பரிந்துரை செய்கின்றனர். மேலும்  கால்நடைகளுக்கு குடிநீர் இணைப்பு இருந்தும் செயல்படாததால் குடிநீரின்றி தவிக்கும் கால்நடைகள்.ஆகவே, மாவட்ட நிர்வாகம் கால்நடைகள் மீது தனி கவனம் செலுத்தி நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!