ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டியில் மே தினத்தை முன்னிட்டு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கேக் வெட்டி, இனிப்புகள் வழங்கிய தங்கப்பாண்டியன் எம்எல்ஏ!


விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தொகுதியில் இன்று (01.05.2025) காலை மே-1 உழைப்பாளர்களின் தினத்தை முன்னிட்டு செட்டியார்பட்டியிலுள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பாக நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் பாளையத்து பாண்டியர் S.தங்கப்பாண்டியன் எம்எல்ஏ அவர்கள் 


கலந்து கொண்டு கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார், அதனைத்தொடர்ந்து செட்டியார்பட்டி பேரூராட்சியில் MLA அவர்களின் ஏற்பாட்டில் மே தின சிறப்பு நிகழ்ச்சி சிறப்பாக  நடைபெற்றது, இந்நிகழ்வில் பேசிய தங்கப்பாண்டியன்


MLA அவர்கள் உழைப்பாளர்களின் நலன் காக்கும் அரசு நமது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு எனவும்,உழைக்கும் மக்களுக்கு எப்போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உறுதுணையாக இருப்பார் அவர்கள் வழியில் மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களும் விருதுநகர் மாவட்டத்தின்  அமைச்சர் பெருமக்களும் 


இராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினரான நானும் இராஜபாளையம் தொகுதியிலுள்ள தொழிலாளர்களுக்கு எப்போதும் பாதுகாப்பாகவும் அவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் இருப்போம் எனக்கூறி அனைவருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். அதனைத்தொடர்ந்து 


தொழிலாளர்களுடன் தங்கபாண்டியன் MLA அவர்கள் அமர்ந்து மதிய விருந்து சாப்பிட்டு மகிழ்ந்தார். இந்நிகழ்வில் செட்டியார்பட்டி சேர்மன் ஜெயமுருகன், பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் பேரூர் கழக செயலாளர்கள் இளங்கோவன், துணைச்சேர்மன் விநாயகமூர்த்தி உள்ளாட்சி பிரதிநிதிகள் தொழிலாளர்கள் பேரூராட்சி பணியாளர்கள், திமுக கழக நிர்வாகிகள் பொதுமக்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!