திருச்சியில் பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையத்தை சுற்றி பார்க்க வந்த பொதுமக்களுடன் கலந்துரையாடிய அமைச்சர் கே.என் நேரு!



திருச்சி மாவட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களால் இரண்டு தினங்களுக்கு முன்பு திறந்து வைக்கப்பட்ட திருச்சிராப்பள்ளி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் நகர்புற மற்றும் நீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என் நேரு அவர்கள் இன்று நேரடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது விடுமுறை தினத்தையொட்டி புதிதாக திறக்கப்பட்ட பேருந்து நிலையத்தை சுற்றிப் பார்க்க பொதுமக்கள் திரளாக வருகை தந்த நிலையில் அவர்களிடம்  கலந்துரையாடினார். 

மேலும், மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள பஞ்சப்பூர் பேருந்து நிலையம் குறித்தும், அதன் உள் கட்டமைப்பு வசதி குறித்தும் மகிழ்ச்சி தெரிவித்த பொதுமக்களின் கருத்துகளை கேட்டறிந்து அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். இந்த நிகழ்வின் போது, மாநகர மேயர் மு. அன்பழகன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மா. பிரதீப் குமார் இ.ஆ.ப., அவர்கள், அரசு அதிகாரிகள் - அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

கரூர் & திருச்சி மாவட்ட செய்தியாளர் சக்திவேல் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!