அம்மூர் அருகே இடைப்பாளையம் கிராம கோயில்களுக்கு நடைபெற்ற மகா கும்பாபிஷேகம் விழா அமைச்சர் ஆர்.காந்தி பங்கேற்பு!



ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் அடுத்த இடைப்பாளையம் கிராம கோயில்களுக்கு புனரோதாரண  அஷ்டபந்தன  மகா கும்பாபிஷேக விழாவில் அமைச்சர்  ஆர்.காந்தி  பங்கேற்று வழிபாடு செய்தார். ராணிப்பேட்டை மாவட்டம்,சோளிங்கர் வட்டம், இடப்பாளையம் கிராமம், அருள்மிகு  மலைக்கோட்டை   விநாயகர்,இராதா ருக்கமணி கிருஷ்ணர்,மந்தைவெளி  அம்மன், கங்கையம்மன்,  ஓம் சக்தி அம்மன்  ஆகிய  ஆலயங்களின்  புனரோதாரண  அஷ்டபந்தன  மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு யாக சாலை பூஜை ஹோமம், மகா பூர்ணாஹூதி,கலச புறப்பாடு உடன் மேளதாளங்கள் வாத்தியங்கள் முழங்க மந்திரங்கள் ஓத கோயில்  கலசங்களுக்கு  புனித  நீர்  ஊற்றி  மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.  

இந்த விழாவில் அமைச்சர் ஆர்.காந்தி, சோளிங்கர் எம்எல்ஏ ஏ.எம்.முனிரத்தினம், சோளிங்கர் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, கிராம முக்கிய பிரமுகர். EPS  அன்பரசு, ஊராட்சி வார்டு உறுப்பினர் சதீஷ்குமார் மற்றும் கிராம பொதுமக்கள், இளைஞர்கள் என திரளாக கலந்துகொண்டு  சுவாமி  தரிசனம்  செய்து  வழிபட்டனர். தொடர்ந்து பொதுமக்கள் அனைவருக்கும் கோயில் அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டன.பின்னர் மாலை கேரள செண்டை மேள வாத்தியம் முழங்க,வான வேடிக்கையுடன் சுவாமி ஊர்வலம் நடைபெற்றது. இதையடுத்து மே 12 ஆம் தேதி திங்கள்கிழமை காலை 108  பால்குட அபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை  இடப்பாளையம் கிராம பொதுமக்கள்,விழாக்குழுவினர்கள், இளைஞர்கள் உள்ளிட்டோர்  செய்திருந்தனர்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவக்குமார் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!