அருந்ததியினரின் பட்டா அரசு கணக்கில் கொண்டு வரவும் சாலை சீரமைக்க வேண்டியும் அரக்கோணத்தில் நடைபெற்ற ஜமாபந்தில் சித்தேரி தலைவர் கோரிக்கை மனு!

ராணிப்பேட்டை மாவட்டம்,அரக்கோணம் தாலுக்கா அலுவலகத்தில் கிராம மக்களின் குறை தீர்க்கும்  ஜமாபந்தி   மாவட்ட ஆட்சி தலைவர். ஜே. யு. சந்திரகலா தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த ஜமாபந்தில் குறிப்பிட்ட சில ஊராட்சி தலைவர்கள் மட்டும் அவரவர் கிராம மக்களுக்கான குறை 

போக்கும் மனுக்களை கொடுத்து வருகின்றனர் அந்த வரிசையில் சித்தேரி ஊராட்சி மன்ற தலைவர். கலைஞ் செழியன் சித்தேரி மக்களுக்கான குறைகளை மனுவாக அளித்தார். அந்த மனுவில் அருந்ததி பாளையத்தில் வசிக்கும் 38 குடும்பத்தாருக்கு 1996 ல் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது ஆனால் அதனை அரசு கணக்கில் கொண்டு வராமல் இருப்பதால் அதனை அரசு கணக்கில் கொண்டு வரும்படி கேட்டுக் கொண்டார்.  மற்றொரு மனுவில் சித்தேரி பரித்தி புத்தூர் சாலை மற்றும் அதன் இணைப்பு சாலையான கீழ்க்கண்டிகை அண்ணாநகர் வழி  சாலைகள் மிக மோசமாக இருந்து வருகிறது. அதனை சீரமைத்து கொடுக்கவும் அதற்கான உத்தரவு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன் இவ்வாறு மனுவில் கிராம தலைவர். கலைஞ்செழியன் குறிப்பிட்டுள்ளார். அப்பொழுது ஊராட்சி மன்ற துணைத் தலைவர். வார்டு உறுப்பினர்கள். அருந்ததி மக்கள் ஆகியோரும் உடன் இருந்தனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!