பண்ருட்டி அருகே நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கிய நபரை காப்பாற்றிய காவலர்களை பாராட்டிய ஜெயக்குமார். ஐ.பி.எஸ்!
கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.S. ஜெயக்குமார் IPS அவர்கள் காவல்துறை நெடுஞ்சாலை ரோந்து பணி மேற்கொள்ளும் காவல்துறையினர் வாகன விபத்தினால் காயம் ஏற்பட்ட நபர்களின் உயிரை காக்கும் பொருட்டு நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களில் உடனடியாக அழைத்து சென்று மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க உதவி செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கி இருந்தார். 19.5.2025 தேதி இரவு பண்ருட்டி - காடாம்புலியூர் நெடுஞ்சாலை மேல்மாம்பட்டு என்ற இடத்தில் இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த நபர் ஐயப்பன் வயது 53, த/பெ சுப்புராயன், நடுத்தெரு, ஏனதிரிமங்கலம், திருவெண்ணைநல்லூர் என்பவரை VKT 1 நெடுஞ்சாலை ரோந்து வாகனம் பணியில் இருந்த தலைமை காவலர். தர்மராஜ், காவலர். சதீஷ்குமார் ஆகியோர் காயம்பட்ட நபரை உடனடியாக காவல் வாகனத்தில் ஏற்றி கொண்டு பண்ருட்டி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்த்து உதவி மேற்கொண்டனர். வாகன விபத்தில் அடிபட்டு கிடந்தவரை காவல் வாகனத்தில் ஏற்றி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க உதவிய காவல் துறையினரை காவல் கண்காணிப்பாளர். S ஜெயக்குமார் IPS அவர்கள் பாராட்டினார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக