கடலூர் மாவட்ட காவல்துறையினர் பணியிட மாறுதலுக்கான நடைபெற்ற கவுன்சிலிங் ஜெயக்குமார். ஐ.பி.எஸ் பங்கேற்பு!

கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS அவர்கள் உத்திரவின்பேரில் கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், சிதம்பரம், விருதாச்சலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய 7 உட்கோட்டங்களில்  காவல் நிலையங்கள் மற்றும் சிறப்பு பிரிவுகளில் தொடர்ந்து 3 வருடங்கள் ஒரே காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் காவலர்கள் முதல் சிறப்பு உதவி ஆய்வாளர் வரை பணியிட மாறுதல் சம்பந்தமாக விருப்ப மனுக்கள் பெறப்பட்டது. இன்று கடலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்திற்கு  வரவழைக்கப்பட்டனர். கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள் முன்னிலையில் பணியிட மாறுதல் கோரும் காரணங்களை கேட்டு கவுன்சிலிங் முறையில் அவர்களின் விருப்பத்துக்கு ஏற்றவாறு 178 காவல்துறையினருக்கு  

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS  அவர்கள் பணியிட மாறுதல் ஆணை  பிறப்பித்தார்.  கூடுதல் காவல் கண்காணிப்பாளர். N. கோடீஸ்வரன், துணை காவல் கண்காணிப்பாளர்கள். ரூபன்குமார்,ராஜா, பாலகிருஷ்ணன், விஜிகுமார், லமேக், இராதாகிருஷ்ணன், மோகன்,  பார்த்தீபன், காவல் அலுவலகம் நிர்வாக அலுவலர். சிவக்குமார் ஆகியோர்  உடன் இருந்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!