கடலூர் - கோவில் திருவிழாவில் பாட்டு கச்சேரி நிகழ்ச்சியில் போதைப்பொருள் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்ட உதவி ஆய்வாளர்‌. பிரசன்னா!


கடலூர் மாவட்டம் புதுநகர் காவல் சரகம் உண்ணாமலை செட்டி சாவடி கோவில் திருவிழா பாட்டு கச்சேரி நிகழ்வில்போது இளைஞர்களின் உடலுக்கு கேடு விளைவிக்கும் கஞ்சா, ஹான்ஸ், குட்கா  போன்ற போதை பொருட்களை பயன்படுத்த கூடாது என கடலூர் புதுநகர் காவல் உதவி ஆய்வாளர் திரு. பிரசன்னா அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.  மேலும் போதைப் பொருட்கள்  விற்பனை நடைபெற்றல் ரகசியமாக  தகவல்கள் கொடுத்தால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்  எனவும், மாணவர்கள் நல்ல முறையில் படித்து   தமிழக அரசின் போட்டி தேர்வுகளான டிஎன்பிஎஸ்சி, காவலர் தேர்வுகள் கலந்து கொண்டு வெற்றி பெற்று  அரசாங்க வேலைக்கு சென்று சமுதாயத்திற்கு முன்மாதிரியாக திகழ வேண்டும் என அறிவுரை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!