அரக்கோணம் ஜமாபந்தியில் புளியமங்கலம் தலைவர் கோரிக்கை மனு!


ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுகா அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் ஜமாபந்தி நேற்று மாவட்ட ஆட்சியர் ஜெயு. சந்திரகலா தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக் கள் பல்வேறு கோரிக்கைகளை மனுவாக கொடுத்தனர் அவர்களில் புளியமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் | இளையராஜா மக்கள் சார்பில் ஐந்து மணுக்களை கொடுத் தார்.அதில் 30 லிட்டர் டேங்க் மிகவும் பழுதடைந்த நிலை யில் ஸ்ரீராம் பகுதி மக்கள் குடிநீரின்றி அவதிக்குள்ளாகி வருகின்றனர் எனவே குடிநீர் டேங்க் அமைத்து தரும்ப டியும் ஊராட்சி முழுவதும் பன்றிகள் வளர்க்கப்படுகிறது அவைகள் ஒதுக்குப்புறமாக வளர்க்காமல் விடுவதால் ஊரை சுற்றித் வரும் பன்றிகளால் கிராம மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர் அதேபோல் ஊராட்சி முழுவ தும் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாமல் இருந்து வருகி றது இதனால் சுகாதார கேடு விளைவித்து வருகிறது ஆகவே கழிவுநீர் கால்வாய் அமைத்துத் தரும்படியும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார் அப்போது துணைத் தலைவர் ரமேஷ் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் பிரகாசம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!