கரூரில் இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி தொடக்கம் முன்னாள் அமைச்சர். செந்தில் பாலாஜி பங்கேற்பு!


கரூர் மாவட்டம் தமிழ் மண்ணின் பெரும் பெருமை, தமிழினத் தலைவர் முத்தமிழ் அறிஞரால் இசைஞானி என பட்டம் சூட்டப்பட்டு, இன்று உலகத் தமிழ் உயிர்களின் உணர்வில் கலந்த உயர்ந்தவர்  ஐயா இளையராஜா அவர்களின் இன்பமிகு இசை நிகழ்ச்சியை கரூரில் துவக்கி வைத்தனர். இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட திமுக செயலாளருமான. 

செந்தில் பாலாஜி அவர்கள் கலந்து கொண்டு கரூர் மாவட்ட காற்றில் தனது இசையை கலந்த இசைஞானிக்கு கரூர் மாவட்ட மக்களின் சார்பாக நன்றிகளை தெரிவித்து, லண்டனில் சிம்பொனி இசையமைத்த இசைஞானி அவர்களை பெருமைப்படுத்தும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களின் தலைமையில், 

வருகின்ற ஜூன் மாதம் 2-ஆம் தேதி, சென்னையில் மாபெரும் பாராட்டு விழா நடைபெறுகிறது என்பதையும் பேரன்புடன் தெரிவித்தார். இந்நிகழ்வை அற்புதமாக ஏற்பாடு செய்த  அஜித் ராஜா அவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்தார். இந்த நிகழ்வில் கரூர் மாவட்ட திமுக கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!