கடலூர் அருகே நெல்லிக்குப்பம் மற்றும் நடுவீரப்பட்டு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க நடைபெற்ற மனு தீர்வு நாள் விசாரணை!


கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் மற்றும் நடுவீரப்பட்டு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள பல்வேறு வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில் நெல்லிக்குப்பம் தனியார் திருமண மண்டபத்தில் மனு தீர்வு நாள் விசாரணை நடைபெற்றது. நெல்லிக்குப்பம் மற்றும் நடுவீரப்பட்டு காவல் நிலையங்களில் பதியப்பட்ட நிலுவையில் உள்ள பல்வேறு வழக்குகளை விரைந்து முடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்களின் உத்தரவின் பேரில் பண்ருட்டி துணை கண்காணிப்பாளர் ராஜா ஆலோசனையின் படி இன்று நெல்லிக்குப்பத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மனுதீர்வு நாள் நடைபெற்றது. இதில் பல்வேறு வழக்குகள் தொடர்பான மனுக்களை நெல்லிக்குப்பம் காவல் ஆய்வாளர். ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.இதில் நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட இரு தரப்பினரையும் அழைத்து பேசி சுமூக தீர்வு காணப்பட்டது. மேற்படி நிகழ்ச்சியில் நடுவீரப்பட்டு காவல் உதவி ஆய்வாளர் முகிலரசு, சிறப்பு உதவி ஆய்வாளர் நாகராஜன், காவலர்கள். ஜோ அருள் செல்வராஜ்,பாலு, அன்பரசன், விக்னேஷ்,பிரமிளா, உள்ளிட்ட காவலர்கள் மனு தீர்வு முகாமில் கலந்து கொண்டனர்.மேற்படி முகாமில் வழக்குகள் நிலுவையில் உள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தீர்வு கண்டனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!