அரக்கோணம் மற்றும் நெமிலி தாலுக்கா தனியார் பள்ளி வாகனங்கள் சோதனை!!


ராணிப்பேட்டை மாவட்டம்,தமிழகம் முழுவதும் வரும் ஜூன் மாதம் 2 ஆம் தேதி பள்ளிகள் திறக்க உள்ளது. ஆகவே தமிழகத்தில் செயல்பட்டு வரும் அனைத்து தனியார் பள்ளிகளின் வாகனங்கள் பரிசோதனை உட்படுத்த வேண்டும் என்பது அரசு உத்தரவு ஆகவே ஒவ்வொரு வருடம் வட்டார போக்குவரத்து துறையால் இந்த பணி மேற்கொள்ளபட்டு  வருகிறது. 

அதன் ஒரு பகுதியாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 17ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் ராணிபேட்டையில்  தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக அரக்கோணம் மற்றும் நெமிலி வட்டாரங்களில் உள்ளடக்கிய 29 பள்ளிகளின் 240 வாகனங்கள் சோதனைக்கு  உட்படுத்த பட்டது. இதற்கான எளிய நிகழ்ச்சிக்கு 

அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியர். வெங்கடேசன் தலைமை தாங்கி னார்.  அரக்கோணம் போக்குவரத்து மோட்டார் ஆய்வாளர். செங்குட்டு வேல் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை மாவட்ட போக்குவரத்து (ஆர்டிஓ) அதிகாரி மோகன் மற்றும் தனியார் பள்ளிகளின் முதன்மை மாவட்ட கல்வி அலுவலர். சுதர்சன் பாபு தாலுக்கா காவல் ஆய்வாளர். பழனிவேல் மற்றும் தீயணைப்புத் துறையினர் கலந்து கொண்டனர்.

 நிகழ்ச்சியில் வாகன ஓட்டுனர்கள் எப்படி தீவிபத்தினை கையாள்வது  குறித்து  தீயணைப்பு துறை குழுவினர் தீ   பாதுகாப்பு நடவடிக்கைகளை N. செயல் விளக்கமளித்தனர். தொடர்ந்து ஒவ்வொரு பேருந்துகளின் தர கட்டு பட்டை அதிகாரிகள் குழ சோதனையில்  ஈடுபட்டனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!