சென்னை தலைமைச் செயலகத்தில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலத்தை எதிர்கொள்வது குறித்து நடைபெற்ற ஆய்வு கூட்டம் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு!

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலத்தை எதிர்கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டுப் பணிகள் தொடர்பாக மாண்புமிகு துணை முதலமைச்சர். உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில்  ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - கால்வாய்கள், கழிவுநீர் வடிகால்கள், ஏரி, குளங்கள் உள்ளிட்டவற்றை முறையாக தூர்வருவது - மக்கள் பிரதிநிதிகள் கருத்துக்களின் அடிப்படையில் முன்னெச்சரிக்கை பணிகளை துரிதப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. 

மேலும், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறை, மின்சாரத்துறை உள்ளிட்டவை ஒருங்கிணைந்து 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவது குறித்தும் மாண்புமிகு துணை முதலமைச்சர். உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஆலோசனை வழங்கினார். 

இந்த ஆய்வு கூட்டத்தில், மாண்புமிகு அமைச்சர் . பி.கே. சேகர்பாபு அவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர். கலாநிதி வீராசாமி அவர்கள், மேயர். பிரியா ராஜன் அவர்கள், துணை மேயர். மகேஷ் குமார் அவர்கள் ஆகியோருடன் அரசு அதிகாரிகள் -  மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!