கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணியினரை பாராட்டிய முன்னாள் அமைச்சர். செந்தில் பாலாஜி!


கரூர் மாவட்டம்,மாண்புமிகு தமிழ்நாடு  முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன், கரூர் திருவள்ளுவர் மைதானத்தில்,  22/05/2025 முதல் 27/05/2025 வரை 6 நாட்கள், அகில இந்திய அளவிலான, 65-ஆம் ஆண்டு எல்.ஆர்.ஜி நாயுடு கோப்பைக்கான ஆண்கள் கூடைபந்து போட்டிகளும், 11-ஆம் ஆண்டு கே.வி.பி பெண்களுக்கான கூடைபந்து போட்டிகளும்  சிறப்பாக நடைபெற்றது..  நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டிகளில் வெற்றிப் பெற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் அணி வீரர்களை முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக செயலாளர் மற்றும் கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி அவர்கள் பரிசளித்து பாராட்டினார்.


இந்த நிகழ்வில்,கரூர் மாவட்ட ஆட்சியர்.மீ.தங்கவேல் இ.ஆ.ப., கரூர் மாவட்ட கூடைப்பந்து சங்கத் தலைவர். சி. பாஸ்கர், துணைத் தலைவர்கள். சூரிய நாராயணன்,  சண்முகசுந்தரம்,  பாலசுப்பிரமணியன், செயலாளர். முகமது கமாலுதீன், இணைச் செயலாளர்கள். வெங்கடேசன்,  முகமது அமீன், செயற்குழு உறுப்பினர்கள். முத்துராமன், சுரேஷ், செந்தில்ராஜா,  வெங்கடேசன், ஜீவானந்தம் கலந்து கொண்டனர்.

கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!