கடலூர் சாமியார்பேட்டை கடற்கரையில் தத்தளித்த குடும்பத்தினரை காப்பாற்றிய காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய ஜெயக்குமார் ஐபிஎஸ்!
கடலூர் மாவட்டம் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS அவர்கள் உத்தரவுபடி கடலூர் மாவட்டத்தில் தேவனாம்பட்டினம், சாமியார்பேட்டை, பரங்கிப்பேட்டை ஆகிய கடற்கரை பகுதிகளில் கோடை விடுமுறை நாட்களில் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கடலில் குளிக்கும்போது அசம்பாவிதம் ஏற்படாத வண்ணம் தடுக்கும் பொருட்டு சிறப்பு உதவி ஆய்வாளர். மில்டன் தலைமையிலான காவல்துறை மீட்பு குழுவினர் கண்காணிப்பு பணியில் தலைமை காவலர். கலைச்செல்வன், முதல் நிலை காவலர். வெங்கடாஜலபதி ஆகியோர் சாமியார்பேட்டை கடற்கரையில் கடலில் இறங்கி குளித்தபோது தத்தளித்த குடும்பத்தினரை பத்திரமாக மீட்டது சம்பந்தமாக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் இன்று மீட்பு குழுவினர் அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்

கருத்துகள்
கருத்துரையிடுக