கடலூர் மாவட்ட மைய நூலகம் மற்றும் நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்தும் கோடை ஓவிய பயிற்சி நிறைவு விழா! கொண்டாட்டம்!!
கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட மைய நூலகத்தில் கோடை ஓவியப் பயிற்சி நிறைவு விழா இன்று கொண்டாடப்பட்டது. இதனை மாவட்ட மைய நூலகமும் நூலக வாசகர் வட்டம் இணைந்து இவ்விழாவை நடத்தினர்.
முன்னதாக நூலகர் ஆனந்த கணேசன் விழாவினை தலைமை ஏற்று நடத்தினார். பெரியார் கலைக் கல்லூரி மாணவ மாணவிகளும், கிருஷ்ணசாமி பெண்கள் கலைக் கல்லூரி மாணவிகளும் பெருந்திரளாக பயிற்சியில் கலந்து கொண்டனர். மாணவ மாணவிகளுக்கு ஓவிய ஆசிரியர். மனோகரன் மற்றும் அவரது துணைவியார். கலைச்செல்வியும் பயிற்சி அளித்தனர். இவ்விழா வில் உலக திருக்குறள் பேரவை மாவட்ட தலைவர். மற்றும் நூலக வாசகர் வட்ட தலைவருமான தமிழ் அரிமா பா.மொ. பாஸ்கரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். 20 வகையான தலைப்புகளில் உள்ள மெய் நிகர் நூலகத்தில் இயற்கை காட்சிகள் மற்றும் வனவிலங்குகள் கடல் வாழ் விலங்குகளையும் மாணவ மாணவிகள் கண்டு களித்தனர்.
விழாவில் நூலக பணியாளர்கள். சண்முகசுந்தரம், இந்திரா காந்தி, குமுதம் ,ஆறுமுகம் மற்றும் கண்ணப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியில் சண்முகசுந்தரம் நன்றி கூற விழா இனிது முடிவுற்றது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக