அரக்கோணத்தில் கலெக்டர் தலைமையில் நடைபெற்ற ஜமாபந்தி!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 2025 ஆண்டு கிராம கணக்கு வழக்குகள்சரி பார்க்கவும் மற்றும் மக்கள் குறை தீர்க்கும் ஐந்து நாட்கள் ஜமாபந்தி தொடங்கியது மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமை தாங்கி நடத்தினார் தாசில்தார் வெங்கடேசன் வரவேற்றார் ஜமாபந்தில் புளியமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் இளையராஜா பல்வேறு கோரிக்கை மனு கொடுத்தார் அதில் ஸ்ரீராம் நகர மக்களுக்கான முப்பதாயிரம் லிட்டர் தண்ணீர் டேங்க் பழுதடைந்து போனதால் மக்கள் குடிநீருக்கு  புதிய டேங்க் அமைத்துத் தரும்படி கேட்டு கொண்டார்.

அதுபோல் புது கேசாவரம் ஊராட்சி மன்ற தலைவர் நவாஸ் அகமது தனது ஊராட்சியில் உள்ள மாந்தோப்புபகுதி மக்களுக்கு சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டுமென உட்பட பல கோரிக்கை மனு கொடுத்தார்  இதுபோன்று அம்மனூர் ஊராட்சி  கண்ணன் நகரில்  சாலை ஆக்கிரமிப்பால் பல ஆண்டு பாதிக்கபட்டு வருவதால் சாலை மீட்டு தர வேண்டும்  கண்ணன் நகர் குடியிருப்பு சங்க செயலாளர் மணியரசு நிர்வாகிகளுடன் மனு கொடுத்தார் மேலும் பல்வேறு மக்கள் தங்களுக்கு வீட்டுமனை பட்டா வீட்டு மனை வழங்கும்படி மனு கொடுத்தனர் கூட்டத்தில் பல்வேறு துறை அதிகாரிகள் வருவாய் துறை அலுவலர்கள் அனைவரும் உடன் இருந்தனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!