விருதுநகர் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்த மாணவன் மனீஷ் அவர்களுக்கு பாராட்டு விழா தங்கப்பாண்டியன் எம்எல்ஏ பங்கேற்பு!


விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தொகுதியில் இன்று (15.05.2025) மதியம் 3 மணியளவில் கேசா டி மிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விருதுநகர் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்த R.மனீஷ் என்ற மாணவனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. 

இந்த பாராட்டு விழாவில் S.தங்கப்பாண்டியன் எம்எல்ஏ அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இந்நிகழ்வில் பேசிய MLA அவர்கள், மனீஷ் வெற்றிபெற்றதுபோல் அனைத்து மாணவர்களும் வெற்றிபெற்று முயற்சி செய்து அனைவரும் அவரவர் விரும்பும் 

துறையில் சாதித்து தங்களின் பெற்றோர்களுக்கும் ஆசிரிய பெருமக்களுக்கும் பெருமை சேர்க்கவேண்டுமெனவும்  நமது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும் துணை முதலமைச்சர் அவர்களும் கல்வி அமைச்சர் அவர்களும் இந்தியாவிலேயே கல்வித்துறையை முதன்மை துறையாக 

மாற்றி கல்விக்கென அதிக திட்டங்களான தமிழ்புதல்வன், புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம் போன்ற சிறப்பான திட்டங்களை கொண்டுவந்து முதன்மை மாநிலமாக மாற்றி வருகிறார்* எனவும், மேலும் மாணவர்களுக்கு நமது மாவட்த்திலுள்ள அமைச்சர் பெருமக்களான வருவாய்துறை 


அமைச்சர் அவர்களும் நிதித்துறை அமைச்சர் அவர்களும் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் நானும் எப்போதும் உறுதுணையாக இருப்போம் என கூறினார். அதனை தொடர்ந்து அதிக மதிப்பெண் பெற்ற மாணவ 

மாணவியர்களுக்கு நினைவு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கினார். இந்நிகழ்வில் நகர செயலாளர் ராமமூர்த்தி,  மாவட்ட கல்வி அலுவலர் மலர், பள்ளி தாளாளர் வைமா திருப்பதி செல்வன், அருணாதேவி, தலைமை 

ஆசிரியர் ராமசாமி நகர மணவரணி அமைப்பாளர் நகேஸ்வரன் மற்றும் ரோட்டரி சங்க உறுப்பினர்கள்,  ஆசிரிய பெருமக்கள்,  மாணவ மாணவ மாணவியர்கள் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!