ராணிப்பேட்டையில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழா அமைச்சர். ஆர். காந்தி பங்கேற்பு!


ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை தனியார் மண்டபத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இந்த சமுதாய வளைகாப்பு விழாவில் ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப்பன், ராணிப்பேட்டை நகராட்சி தலைவர் சுஜாதா வினோத் முன்னிலை வகித்தனர், மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் சந்திரகலா அவர்கள் தலைமை வகித்தனர். 

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர் காந்தி பங்கேற்று குத்துவிளக்கேற்றி, சமுதாய வளைகாப்பு விழாவினில் சீர்வரிசைகள் வழங்கி கர்ப்பிணி பெண்களை வாழ்த்தினார். 

மேலும் இதில் நகர மன்ற துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா, சேஷா வெங்கடரமணன், தேவி பென்ஸ் பாண்டியன், மற்றும்  500க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள், துறை சார்ந்த அலுவலர்கள் பொதுமக்கள் பங்கேற்றனர்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவக்குமார் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!