நெய்வேலியில் நடைபெற்ற கடலூர் மேற்கு மாவட்ட செயல்வீரர் கூட்டம் அமைச்சர் கே.என் நேரு பங்கேற்பு!
கடலூர் மாவட்டம் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி கழக மாவட்டங்கள் தோறும் நிர்வாகிகளை நகர்புற வளர்ச்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என் நேரு அவர்கள் நேரில் சந்தித்து ஆலோசனை வழங்கினார்.
அதன் தொடர்ச்சியாக கடலூர் மேற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் நெய்வேலியில் கலந்து கொண்டார். அப்போது தேர்தல் கள நிலவரம் - தொகுதி மேம்பாட்டுப் பணிகள் - திண்ணைப் பிரச்சாரங்கள் - கழக அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்வதில் நிர்வாகிகள் காட்டும் ஈடுபாடு உள்ளிட்டவை குறித்து ஒவ்வொரு நிர்வாகிகளிடமும் தனித்தனியாக கேட்டறிந்தார். தமிழ் - தமிழர் - தமிழ்நாட்டின் உரிமைகளை காத்து நிற்கும் நம் தலைவர் அவர்களின் நல்லாட்சி தொடரவும், நம் திமு கழக அரசு 7வது முறையாக ஆட்சி அமைக்கும் வகையில் ஒவ்வொருவரும் களப்பணி மேற்கொள்ள ஆலோசனை வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட கழக செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் ஆகியோருடன் மாநில - மாவட்ட - மாநகர - ஒன்றிய - நகர - பேரூர் கிளை கழக நிர்வாகிகள் அனைவரும் திரளானோர் பங்கேற்றனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்



கருத்துகள்
கருத்துரையிடுக