கடலூர் அருகே சிறுபாக்கம் பகுதியில் மணல் கடத்தல் ஈடுபட்டவர்களை கைது செய்த காவலர்களை பாராட்டிய ஜெயக்குமார். ஐ.பி.எஸ்!
கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.S. ஜெயக்குமார் IPS அவர்களின் தனிப்படை உதவி ஆய்வாளர். ராஜா தலைமையிலான போலீசார் சிறுபாக்கம் காவல் எல்லைக்குட்பட்ட அடரி நடு ஏரியில் டிராக்டர்கள் மூலம் மணல் கடத்தி வந்த குப்புசாமி வயது 45, கருப்பசாமி வயது 33, சரவணன் வயது 20, வேல்முருகன் வயது 43, மகாதேவன் வயது 30, மாதேஷ் வயது 28, மணிகண்டன் வயது 19, ஆகியோர்களை மடக்கிப்பிடித்தும், 6 டிராக்டர்கள் மற்றும் ஜேசிபி வாகனத்தை கைப்பற்றி சிறுபாக்கம் காவல் நிலையத்தில் மணல் கடத்தல் வழக்கு பதிவு செய்து எதிரிகள் சிறையில் அடைக்கப்பட்டனர். மணல் கடத்தல் குற்றவாளிகளை பிடித்து வாகனத்தை பறிமுதல் செய்த காவல்துறையினரை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS அவர்கள் பாராட்டினார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக