தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் சார்பு உதவியாளர் பதவிக்கான நேரடி எழுத்து தேர்வு பயிற்சி வகுப்பினை துவக்கி வைத்த ஜெயக்குமார் ஐபிஎஸ்!


கடலூர் மாவட்டம் கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் சார்பு உதவியாளர் பதவிக்கான நேரடி எழுத்து தேர்வு இலவச பயிற்சி வகுப்பினை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  S. ஜெயக்குமார் IPS அவர்கள் துவக்கி  வைத்து பேசுகையில்  கடலூர் மாவட்டத்தில் உள்ள பின்தங்கிய கிராமப்புற மாணவர்கள் மற்றும் கடலூர் மாவட்ட காவல் துறையில் பணியாற்றும் காவலர்கள்  பயன்பெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இலவச பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது. 

இப்பயிற்சி வகுப்புகள் ஆகாஷ் அகாடமி ஆசிரியர்கள் மற்றும் காவலர் பணி ஒதுக்கீடுகளுக்கு காவல்துறை அதிகாரிகள்  மூலம் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் மாணவர்கள் தேர்வு எழுதும்வரை இதர கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் தராமல் , அர்ப்பணிப்புடன்  படித்து சார்பு ஆய்வாளர்  தேர்வில் அனைவரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் என வாழ்த்து பேசினார் கூடுதல் காவல் கண்காணிப்பாளர். நல்லதுரை, துணை காவல் கண்காணிப்பாளர். அப்பாண்டராஜ், ஆயுதப்படை ஆய்வாளர். அருட்செல்வன், ஆகாஷ் அகாடமி பயிற்றுநர்கள். சுபஸ்ரீ, ஆனந்தன். அரசு பள்ளி ஆசிரியர். முருகன், உதவி ஆய்வாளர். பாபு  ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!