சென்னை - கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்!


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் நேற்று (29.04.2025), கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் பின்வரும் பணிகளை துவக்கி வைத்து, முடிவுற்ற பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.


1. கொளத்தூர், ஜமாலியா லேன் திட்டப்பகுதியில் கட்டப்பட்டுள்ள 130 அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார்.


2. கொளத்தூர், பெரியார் அரசு மருத்துவமனையின் பயன்பாட்டிற்காக அதிநவீன அவசர ஊர்தி மற்றும் பேட்டரியால் இயங்கும் 2 வாகனங்களின் சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

3. பல்வேறு நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள மாலை நேர சிறப்பு வகுப்பு மையமான "முதல்வர் கல்விச் சோலை”-யை திறந்து வைத்து, மாணவர்களுடன் உரையாடினார்.


4. கொளத்தூர் தொகுதியைச் சேர்ந்த பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


5. கொளத்தூர், பேப்பர் மில்ஸ் சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். (புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்டும் பணி, புதிய அலுவலகக் கட்டடம் கட்டும் பணி மற்றும் சோமையா தெருவில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்டும் பணி ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்).

6. கொளத்தூர் தொகுதியில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, H2S வாயு கட்டுப்பாட்டு அமைப்புடன் கூடிய தானியங்கி கழிவுநீர் உந்து நிலையத்தை திறந்து வைத்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!