இராஜபாளையம் தொகுதியில் தமிழக முதல்வரால் திறக்கப்பட உள்ள 864 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை நேரில் சென்று ஆய்வு செய்த தங்கப்பாண்டியன் எம்எல்ஏ!


இராஜபாளையம் தொகுதியில் இன்று (19.05.2025) மாலை தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் கட்டப்பட்ட 864 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நாளை காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கவுள்ளார், 

அதற்கான முன்னேற்பாடு பணிகளை பாளையத்து பாண்டியர் S.தங்கப்பாண்டியன் எம்எல்ஏ அவர்கள் ஆய்வு மேற்கொண்டார், இந்நிகழ்வில் பேசிய MLA அவர்கள் சாவி கொடுக்கப்படவுள்ள பயனாளிகள் அனைவருக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளதா என்பதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார் மேலும் 

நாளை முதல்கட்டமாக 100 பயனாளிகளுக்கு வீட்டின் சாவி வழங்கப்படவுள்ளது பின்வரும் அடுத்தடுத்த  நாட்களில் அடுத்தடுத்த பயனாளிகளுக்கு வீட்டின் சாவி வழங்கப்படும் எனக் கூறினார், மேலும் நாளை சிறப்பாக அடுக்குமாடி குடியிருப்பு 

திறப்பு விழா நடைபெற உள்ளது என்பதை இராஜபாளையம் தொகுதி பொதுமக்களுக்கு தெரியப்படுத்தி கொள்கிறோம் எனக் கூறினார். இந்நிகழ்வில் குடிசை மாற்று வாரிய உதவிப்பொறியாளர் முருகேஷ்குமார் யூனியன் பொறியாளர் கதிரவன் ஒன்றிய கழக நிர்வாகிகள் திருக்குமரன் ஜெயந்தி கலந்துகொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!