இராஜபாளையம் அருகே கரிசல் குளம் ஊராட்சி சம்மந்தமும் பகுதியில் ரூ. 80.74 கோடி மதிப்பீட்டில் 864 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் திறப்பு!
அடுக்குமாடி குடியிருப்பை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து இராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் S.தங்கப்பாண்டியன் MLA அவர்களும் வாரியத்துணை தலைவர் ராசாஅருண்மொழி அவர்களும் குத்து விளக்கேற்றி சிறப்பித்தனர்.
அதனைத்தொடர்ந்து மெர்சிபானு என்ற பயனாளியை MLA அவர்கள் அழைத்து வீட்டில் குத்துவிளக்கேற்ற செய்து சிறப்பித்தார். இந்நிகழ்வில் பேசிய MLA அவர்கள், குடிசையில்லா தமிழ்நாட்டை உருவாக்கும் நோக்கில் குடிசை மாற்று வாரியத்தை உருவாக்கி லட்சகனக்கான குடும்பங்களை அடுக்குமாடி குடியிருப்பில் அமர்த்தியவர் முத்தமிழ்
அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் தான் அவர்வழியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சிறப்பாக பணியாற்றி வீடு இல்லாத அனைவருக்கும் சொந்தமாக வீடு வழங்க வேண்டுமென்ற நோக்கில் நகர்ப்புறங்களில் நகர்ப்புற வாழ்விட
மேம்பாட்டு வாரியம் கிராமப்புறங்களில் கலைஞர் கனவு இல்லத்திட்டம் மூலம் கோடிக்கனக்கான குடும்பங்களை சொந்த வீடுகளை அமர்த்தி வருபவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எனவும், இந்த அடுக்குமாடி குடியிருப்பை இராஜபாளையம் தொகுதி மேலப்பாட்டகரிசல்குளம் ஊராட்சி சம்மந்தபுரம் பகுதியில் செயல்படுத்திய
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் விருதுநகர் மாவட்டத்தின் அமைச்சர் பெருமக்களான வருவாய்த்துறை அமைச்சர் அவர்களுக்கும் நிதித்துறை அமைச்சர் அவர்களுக்கும் இராஜபாளையம் தொகுதி பொதுமக்கள் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்
கொள்வதாக கூறினார் தொடர்ந்து பேசிய MLA அவர்கள், அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு எதிர்காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை வரக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு கூடுதலாக இராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 40 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் போர்வெல்
மற்றும் பைப் லைன் அமைக்கப்படவுள்ளது மேலும் தாமிரபரணி குடிநீர் வசதியும் ஏற்படுத்தி தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனக்கூறினார். மேலும் இனிவரும் காலங்களில் நியாய விலைக்கடை ரோடு வசதி பேருந்து வசதி என அனைத்து வசதிகளை படிப்படியாக
நிறைவேற்றப்படும் எனக் கூறினார். மேலும் இதுபோல் புதியதாக 2000 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு அமைக்கும் பணிக்கு DPR தயாரிக்கும் பணி நடைபெற்றுவருகிறது எனவும் MLA அவர்கள் கூறினார். குறிப்பு : 2020 ம் ஆண்டு பூமி பூஜை போட்டு பணி
தொடங்கிய நிலை போதிய நிதி ஆதாரம் இல்லாமால் பணி கிடப்பில்போடப்பட்டது அதனைத்தொடர்ந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நிதி ஆதாரத்தை உருவாக்கி தொடர்ந்து பணியை நடைபெற வழிவகை செய்து கொடுத்தார், மேலும் இராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் என்ற முறையில் S.தங்கப்பாண்டியன்.,MLA அவர்கள் பூமி
பூஜை போடப்பட்டது முதல் தொடர்ந்து பணியை கண்காணித்து பலமுறை நேரில் இடத்தை ஆய்வு செய்து பணி தொடர்ந்து நடைபெற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடமும் மாண்புமிகு துறை அமைச்சர் அவர்களிடமும் அதிகாரிகளிடம் வலியுறுத்தி பணி தொடர்ந்து நடைபெற உறுதுணையாக இருந்தார் தற்போதுகூட
அடுக்குமாடி குடியிருப்பில் கூடுதலாக தண்ணீர் வசதியை ஏற்படுத்தி கொடுக்கும் நோக்கில் சட்ட மன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, இந்த அடுக்குமாடி குடியிருப்பு அமைய MLA அவர்கள்
மேற்கொண்ட முயற்சிகளின் புகைப்படத்தொகுப்பு இணைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் உதவிநிர்வாக பொறியாளர் ராஜகொம்பையாபாண்டியன் உதவிப்பொறியாளர் ஸ்டெபி நகர செயலாளர்கள் ராமமூர்த்தி
மணிகண்டராஜா பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் முன்னாள் துணை சேர்மன் துரைகற்பகராஜ் கவுன்சிலர் செந்தில்குமார் கழக நிர்வாகிகள். ஜெயந்தி கருப்பழகு, திருக்குமரன் நாகேஷ்வரன், மாயாவி முருகேசன், முத்துச்சாமி கழக நிர்வாகிகள் பயனாளிகள் கலந்து கொண்டனர்.
















கருத்துகள்
கருத்துரையிடுக