கடலூர் அருகே மங்களூர் கிராமத்தில் 8 கோடியே 52 லட்சம் மதிப்பீட்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர். சி .வெ. கணேசன்
கடலூர் மாவட்டம்.வேப்பூர் அருகே மங்களூர் கிராமத்தில் 8 கோடியே 52 லட்சம் மதிப்பீட்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் கட்டுமான பணியை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ. கணேசன் அவர்கள் அடிக்கல் நாட்டினார்*
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே மங்களூர் கிராமத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் கடந்த 2022 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது இதில் சர்வேயர், எலக்ட்ரீசியன், மோட்டார் மெக்கானிக், ஏசி மெக்கானிக் நான்கு பிரிவுகளில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் அவர்களுக்கு போதியமான கட்டிட வசதி இல்லாததால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் அவர்களிடம் கோரிக்கை வைத்தனர் அதன் பேரில் இன்று 8 கோடியே 52 லட்சம் மதிப்பீட்டில் அரசு தொழில் பயிற்சி நிலையம் கட்டும் பணியை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ. கணேசன் அவர்கள் அடிக்கல் நாட்டினார் இதன் மூலம் மங்களூர் அதன் சுற்றுவட்டார பகுதியான அடரி, சிறுபாக்கம், மாங்குளம், கழுதூர், ஆவட்டி, மலையனூர், கொத்தனூர், ஒரங்கூர், பனையாந்தூர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமத்தில் உள்ள மாணவ, மாணவிகள் இந்த அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் சேர்ந்து படித்து பயன்பெறுவார்கள். மேலும் இந்த தொழிற் பயிற்சி நிலையத்தில் கூடுதல் தொழிற்கல்வி கொண்டுவர வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக