கோவையில் எடப்பாடியாரின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு கோட்டை ஈஸ்வரன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு யாகம்!
கோவை மாவட்டம் மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா, கழக தலைமை நிலையச் செயலாளர் S.P.வேலுமணி அவர்களின் ஆலோசனைப்படி, மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின்
பிறந்தநாளை முன்னிட்டு அவர் நீண்ட ஆயுளுடன் நலமாக வாழவும், அவரின் சீரிய தலைமையில் கழகம் அரியணையில் அமர்ந்து தமிழக மக்களை கண்ணை இமை காப்பதை போல் காத்திடவும் வேண்டி கோவை மாநகர் மாவட்டம் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உக்கடம் பகுதி கோட்டை ஈஸ்வரன் கோவிலில் கழக மாணவரணி சார்பில் சிறப்பு யாகம் நடைபெற்றது.
உடன் கழக அம்மா பேரவை இணைச்செயலாளர், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம், கழக மாணவரணி செயலாளர் தம்பி சிங்கை ராமச்சந்திரன், மாவட்ட மாணவரணி செயலாளர் தம்பி மணிகண்டன், மாநில, மாவட்ட, பகுதி, வட்டகழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்.
மாவட்ட செய்தியாளர் சக்திவேல்



கருத்துகள்
கருத்துரையிடுக