அம்பாசமுத்திரம் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற 6,754 பயனாளிகளுக்கு ரூபாய் 12.68 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!


திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் இன்று  நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் மாண்புமிகு சட்டமன்ற பேரவைத்தலைவர்.மு.அப்பாவு அவர்கள் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி விழாவினை சிறப்பித்தார்.இந்த நிகழ்வில் 6,754 பயனாளிகளுக்கு ரூ.12.68 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி அவர்களை வாழ்த்தினார்.

இந்நிகழ்ச்சியில், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்.மு.அப்துல் வஹாப் அவர்கள்,  முன்னாள் சட்டமன்ற பேரவைத்தலைவர்.இரா.ஆவுடையப்பன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர். மரு.இரா.சுகுமார், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!