ராஜபாளையம் தொகுதியில் ரூபாய் 65 லட்சம் மதிப்பீட்டில் நிழற்குடை மற்றும் பவர் பிளாக் தளம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை தங்கபாண்டியன். எம். எல் .ஏ தொடங்கி வைப்பு!



விருதுநகர் மாவட்டம்,இராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி  (2025-26) யிலிருந்து  50 லட்ச ரூபாய் மற்றும் மைன்ஸ் நிதி 15 லட்ச ரூபாய் என 65 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அயன்கொல்லங்கொண்டான் ஊராட்சியில் நிழற்குடை அமைத்தல், 

வெள்ளையம்மன் கோவில் தெரு மற்றும் தெற்கு தெரு பகுதிகளில் பேவர் பிளாக் தளம் மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு செல்லும் பாதை & பள்ளி வளாகத்தில் பேவர் பிளாக் தளம் அமைக்கும் பணி போன்ற பணிகளுக்கு 'பாளையத்து பாண்டியர்' MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள் தலைமையில் வாரியத்துணைத் தலைவர் ராசா அருண்மொழி அவர்கள் முன்னிலையில் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பேசிய தங்க பாண்டியன் MLA அவர்கள், கிராமப்பகுதி பொதுமக்களின் தேவை அறிந்து அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது தொடர்ந்து செய்யப்பட்டும் வருகிறது எனக் கூறினார்.

இந்நிகழ்வில் பொறியாளர் பிரஸ்கான் ஊராட்சி செயலர் மின்னல்ஜோதி ஈஸ்வரன் கிளைச்செயலாளர்கள் பரமசிவம் வனராஜ் வைரவன் சிவா கழக நிர்வாகிகள் ஊர் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!