நெமிலி அருகே வேட்டாங்குளம் விவசாய நிலத்தில் மின்சாரம் பாய்ந்து 3 பசுக்கள் பரிதாப உயிரிழப்பு!



ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி பேரூராட்சிக்குட்பட்ட  வேட்டாங்குளம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி முனுசாமி (60). இவர் நேற்று காலை வழக்கம் போல் அதே பகுதியில் உள்ள வயல்வெளியில் தனக்கு சொந்தமான 3 பசுக்களை மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்றுள்ளார். பின்னர் மாலை மீண்டும் வீடு திரும்பும்போது அங்குள்ள விவசாய பாசன. கால்வாயில் அறுந்து விழுந் திருந்த மின்கம்பியை மிதித் ததில் 3 பசுக்கள் மின்சாரம் தாக்கி வீசப்பட்டு அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த முனுசாமி இது குறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் அதிகாரிகள் அங்கு வந்து மின்சாரத்தை துண்டித்தனர். 

மேலும் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி உத்தரவின் பேரில் நெமிலி சப் இன்ஸ்பெக்டர் லோகேஷ் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்'சாரம் பாய்ந்து ஒரே நேரத்தில் 3 பசுக்கள் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் மு. பிரகாசம் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!