ராஜபாளையத்தில் கலைஞர் நகர் மேம்பாட்டு திட்டத்தில் 2.90 கோடி மதிப்பீட்டில் புதுப்பித்த காந்திஜி நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையத்தை காணொளி காட்சி வாயிலாக தமிழக முதல்வர் திறந்து வைப்பு!
விருதுநகர் மாவட்டம்,கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தில் (2022-23) 2.90 கோடி மதிப்பீட்டில் புதுப்பித்த காந்திஜி நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையத்தை காணொளிக் காட்சி மூலம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார், அதனைத்தொடர்ந்து பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் V.P.ஜெயசீலன்.,IAS அவர்கள் தலைமையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர். மாண்புமிகு KKSSR.இராமச்சந்திரன் அவர்கள் குத்துவிளக்கேற்றி சிறப்பித்து பேருந்தை பச்சைக் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இவ்விழாவில் பேசிய மாண்புமிகு அமைச்சர் அவர்கள், திமுக ஆட்சி அமைந்தபின் தான் இராஜபாளையம் தொகுதிக்கு இணைப்புச்சாலைத்திட்டம் ரயில்வே மேம்பாலம் தாமிரபரணி குடிநீர்த்திட்டம் மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தும் திட்டம் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி தொகுதியை வளர்ச்சி பாதை நோக்கி கொண்டுசென்று வருகிறோம் எனவும் அடுத்தும் தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி மலரும் எனவும் அதற்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்வில் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர். ராணிஸ்ரீகுமார்.,MP அவர்கள், இராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர். "பாளையத்து பாண்டியர்' S.தங்கப்பாண்டியன்MLA அவர்கள் வாரியத்துணைத் தலைவர். ராசாஅருண்மொழி அவர்கள் நகராட்சி சேர்மன் பவித்ராஷியாம் அவர்கள் தனுஷ் M.குமார்.,Ex.MP நகர செயலாளர் (தெற்கு) ராமமூர்த்தி அவர்கள் முன்னாள் ஒன்றிய சேர்மன் சிங்கராஜ் பொதுக்குழு உறுப்பினர். கனகராஜ் நகராட்சி துணை சேர்மன் கல்பனாகுழந்தைவேலு
ஒன்றியதுணை சேர்மன் துரைகற்பகராஜ் பேரூர் சேர்மன்கள் ஜெயமுருகன் பாலசுப்பிரமணியன் பேரூர் கழக செயலாளர். இளங்கோவன் மாவட்ட மகளிரணி அமைப்பாளர். சுமதிராமமூர்த்தி மாவட்ட மீனவரணி அமைப்பாளர். நவமணி ஒன்றிய செயலாளர். சரவணமுருகன் நகர்மன்ற உறுப்பினர்கள். ஒன்றிய பேரூர் நகர் கழக நிர்வாகிகள். பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.







கருத்துகள்
கருத்துரையிடுக