ராணிப்பேட்டையில் ஆறுபடை ஸ்ரீ முருக பக்தர்கள் சார்பில் நடைபெற்ற 28 ஆம் ஆண்டு புனித யாத்திரை கொடி அசைத்து துவக்கி வைத்த அமைச்சர் ஆர். காந்தி!


ராணிப்பேட்டை மாவட்டம் மாந்தாங்கல் மோட்டூர் பகுதியில் அமைந்துள்ள  ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய ஆறுபடை முருக பக்தர்கள் சார்பில் 28 ஆம் ஆண்டு புனித யாத்திரை பயணத்தை முன்னிட்டு முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பச்சை நிற ஆடைய அணிந்து பால்குடங்களை தலையில் சுமந்தபடி பக்தி பரவசத்தோடு ஊர்வலமாக வருகை தந்தனர். 

இந்த பால்குடம் ஊர்வலம் நிகழ்ச்சியினை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் அமைச்சர் ஆர்,காந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு பால் குடங்களை தலையில் சுமந்தபடி பக்தர்கள் ஊர்வலமாக வருகை தந்த பின்னர் மாந்தாங்கல் மோட்டூர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் 

ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ள ஆறுபடை முருகப்பெருமான் சிலை மற்றும் விநாயகர், ஸ்ரீ திரௌபதி அம்மன்  ஆகிய சிலைகளுக்கு வேத மந்திரங்கள் முழங்க பாலாபிஷேகம்  செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பித்து வழிபாடு நடைபெற்றது. 

இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்து அருள் பாவித்து சென்றனர். மேலும் கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த பால்குடம் ஊர்வலம் நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக   முன்னாள் ரயில்வே துறை அமைச்சரான ஆர்,வேலு பங்கேற்று இருந்தார்.

மேலும்  முன்னாள் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் இளவழகன் மற்றும் பழனி, முன்னாள் மாநில வன்னியர் சங்க செயலாளர் எம் கே முரளி, கோவில் தர்மகர்த்தா ரவி பிரதர்ஸ், ரமேஷ் பிரசாத், விக்னேஷ் தங்கராஜ்,   மாநில பசுமை தாயகம் துணைச் செயலாளர் மகேந்திரன் மற்றும் ஊர் நாட்டாமைக்காரர் கஜேந்திரன்,சரவணன் உட்பட ஏராளமான முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று இருந்தனர்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவக்குமார் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!