சென்னை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத் தலைமை அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களால் துவங்கப்பட்ட 24/7 செயல்படும் மின்னகம் - மின் நுகர்வோர் சேவை மையம்!



சென்னை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத் தலைமை அலுவலக வளாகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களால் துவங்கப்பட்ட 24/7 செயல்படும் மின்னகம் - மின் நுகர்வோர் சேவை மையத்தில், தற்போது நிலவி வரும் கடும் கோடை வெப்பம், பல்வேறு மாவட்டங்களில் கடும் சூறாவளி காற்று மற்றும் பெய்து வரும் கனமழை காரணமாக மின்னகத்தில் பதிவான மின்சாரம் தொடர்பான பொதுமக்களின் புகார்கள் மற்றும் அதன்மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

இந்த ஆய்வின் கூடுதல் தலைமை செயலாளர்/ தமிழ்நாடு மின் பகிர்மானக்கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர். ஜெ. ராதாகிருஷ்ணன். இ.ஆ.ப., தமிழ்நாடு மின் உற்பத்தி கழக மேலாண்மை இயக்குநர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ். இ.ஆ.ப. தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழக மேலாண்மை இயக்குநர் டாக்டர். அனீஷ்சேகர் இ.ஆ.ப, இணை மேலாண்மை இயக்குநர் (நிதி) விஷு மஹாஜன், இ.ஆ.ப. இயக்குநர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!