விருதுநகர் மாவட்ட அளவில் +2 தேர்வில் முதல் இடம் பிடித்து தங்கபாண்டியன் எம்எல்ஏ-வை நேரில் சந்தித்து வாழ்த்து மாணவன் மனீஷ்!


விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தொகுதியில் இன்று (10.05.2025) காலை அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்  – II (2025-2026) கீழ் தளவாய்புரம் ஊராட்சியில் மாஞ்சோலை கிராமத்தில் புதிய அங்கன்வாடி கட்டிடம் மற்றும் மாஞ்சோலை கிராமத்தில் கிழக்கு பகுதி 

மற்றும்  தளவாய்புரத்தில் கண்ணாடிக்கடை எதிர்புறத்தெரு மற்றும் முதலியார் தெருவில் பேவர் பிளாக் தளம் அமைக்கும் பணிக்கு நமது MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள் தலைமையில் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டப்பட்டது. 

அதனைத்தொடர்ந்து +2 வகுப்பில் விருதுநகர் மாவட்ட அளவில் முதல்இடம் (596/600) பெற்ற கேசா டி மீர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்த  இராஜபாளையம் அம்பலபுளிபஜாரைச் சார்ந்த  R.மனீஷ் என்ற மாணவர்  இராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு  MLA அவர்களை 

சந்தித்து வாழ்த்துக்கள் பெற வந்தாரை MLA அவர்கள் அழைத்து பாராட்டினார்,  இந்நிகழ்வில் மாணவர்  தனது எதிர்கால லட்சியமான பொறியியல் பட்டப்படிப்பு படித்து UPSC தேர்வு எழுதி IAS ஆக வேண்டுமென கூறினார், அதற்கு MLA அவர்கள் விருதுநகர் மாவட்டத்தில் 

முதல்மதிப்பெண் எடுத்து இராஜபாளையத்திற்கு பெருமை சேர்ந்துள்ளாய் அதுபோல் மாவட்டத்தில்  தளவாய்புரம் பெருந்தலைவர் காமராஜர் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி மாணவர் வ.வசந்தகுமார் (593/600) மூன்றாம் மதிப்பெண் பெற்றுள்ளார் 

அம்மாணவருக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்பதாக கூறினார் மேலும்  முதல் மதிப்பெண் பெற்ற R.மனீஷ் என்ற மாணவர்  நான்கு வருட பொறியியல் படிப்பிற்காக கல்விக்கட்டணம் விடுதி கட்டணம்  அதிகளவில் உள்ளதால் தாங்கள் கல்விக்கட்டணம் செலுத்த 

உதவுமாறு கோரிக்கை வைத்ததை அடுத்து MLA அவர்கள் நான்கு வருட  கல்விக்கட்டணத்திற்காக  வருடந்தோறும் தனது ஒருமாத ஊதியமான 1,05,000ஐ வழங்குவதாகவும்  உறுதி அளித்தார். அதில் முதல் வருட படிப்பிற்கான கல்வி 

உதவித்தொகையாக  1,05,000 ஐ இன்று மாலை நடைபெறவுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நான்காண்டு  சாதனை விளக்கப்பொதுக்கூட்டத்தில் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் KKSSR.இராமச்சந்திரன் அவர்களின் பொற்கரங்களால் வழங்கப்படும் எனக்கூறி வழியனுப்பி வைத்தார். 

இந்நிகழ்வில் நகர செயலாளர் (தெற்கு) ராமமூர்த்தி   பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் ஊராட்சி செயலர் சஞ்சீவிக்குமார் கிளைச்செயலாளர் தங்கமணி தங்கராஜ் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் ஊர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!