கடலூர் - நெய்வேலி வட்டம் 18 செக்யூரிட்டி திடலில் நடைபெற்ற கவாத்து பயிற்சியில் கலக கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்கான கவாத்து பயிற்சி!
கடலூர் மாவட்டம் நெய்வேலி உட்கோட்டம் காவல்துறை வாராந்திர கவாத்து நெய்வேலி வட்டம் 18 செக்யூரிட்டி திடலில் நடைபெற்றது. கவாத்து பயிற்சியில் கலக கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்கான கவாத்து பயிற்சி ( Mop Operation Parade ) கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S ஜெயக்குமார் IPS அவர்கள் பார்வையிட்டார். காவல்துறை வஜ்ரா வாகனம் மூலம் கண்ணீர் புகை குண்டு வெடிக்க செய்தும், வருண் வாகனம் மூலம் தண்ணீர் பீச்சடித்து பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. நெய்வேலி உட்கோட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். நெய்வேலி துணை காவல் கண்காணிப்பாளர். ராதாகிருஷ்ணன் காவல் ஆய்வாளர்கள். வீரமணி, இளவழகி, பாண்டிச்செல்வி, ஜெயலட்சுமி, உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் வாராந்திர கவாத்தில் பங்கேற்றனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்


கருத்துகள்
கருத்துரையிடுக