விருதுநகர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக ராஜபாளையம் தொகுதியை சார்ந்த 161 மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கிய தங்கப்பாண்டியன் எம்எல்ஏ!


இராஜபாளையம் தொகுதியில் இன்று (13.05.2025) காலை விருதுநகர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக இராஜபாளையம்  தொகுதியைச் சார்ந்த 161 மாற்றுத்திறனாளிகளுக்கு இராஜபாளையம் ஆனாந்த கார்டனில் மாவட்ட ஆட்சியர் V.P.ஜெயசீலன்.,IAS 

அவர்களும்  ராணி ஸ்ரீகுமார்.,MP அவர்களும் இராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் S.தங்கப்பாண்டியன்.,MLA அவர்களும் வழங்கினார்கள். அஇந்நிகழ்வில் பேசிய MLA அவர்கள், மனு அளித்த ஆறு மாதத்திற்குள் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் வழங்க தன்னார்வதொண்டு 

நிறுவனங்களுடன் பேசி வாகனம் வழங்க வழிவகை செய்த மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்களுக்கும் மாண்புமிகு நிதித்துறை அமைச்சர் அவர்களுக்கும் மாண்புமிகு மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவிப்பதாக கூறினார்.

மேலும் இனிவரும் உள்ளாட்சி தேர்தல்களில் தமிழ்நாடு முழுவதும் 15000க்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளை மக்கள் பிரதிநிதிகளாக மாற்றுவகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சட்டமன்றத்தில் சிறப்பான தீர்மானம் நிறைவேற்றி மாற்றுத்திறனாளிகளின் 

வளர்ச்சிக்குபெரிதும் உறுதுணையாக இருந்து வருகிறார் எனக் கூறினார் தொடர்ந்து பேசிய MLA அவர்கள் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களின் நிதியிலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் வழங்குவதற்கு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கி தருவதாக உறுதி அளித்துள்ளார். 

அதுபோல் மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இராஜபாளையம் தொகுதியிலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று  சக்கர வாகனம் வழங்கப்படவுள்ளது எனக் கூறினார். 

இந்நிகழ்வில் வட்டாட்சியர் வடிவேல் நகர செயலாளர்கள் ராமமூர்த்தி மணிகண்டராஜா சேத்தூர் சேர்மன் பாலசுப்ரமணியன் கவுன்சிலர்கள் செந்தில்குமார் ரோகினிநாகேஷ்வரன் மாற்றுத்திறனாளிகள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!