நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் நவீனரக(Hitech) தண்ணீர் பந்தல் திறப்பு விழா அமைச்சர் ஆர். காந்தி பங்கேற்பு!


ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சேந்தமங்கலம் பகுதியில் தமிழகத்தில் தற்போது கோடை காலம் வெயில் தாக்கம் அதிகரித்து வருகிறது ஆகையால் வெப்பத்தில் இருந்து மக்கள் தாகம் தணிக்கவும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தண்ணீர் பந்தல் வைக்க 

வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்த நிலையில் நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில், நாள் ஒன்றுக்கு சுமார் 500 லிட்டர் குடிநீர் சுத்திகரிப்பு செய்யக்குடிய கருவியுடன் அமைந்துள்ள நவீனரக தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. 

நிகழ்ச்சிக்கு நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ.வடிவேலு தலைமை வகித்தார், மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர். பவானி வடிவேலு வரவேற்றார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி அவர்கள் கலந்துகொண்டு நவீனரக தண்ணீர் பந்தலை ரிப்பன் வெட்டி திறந்து 

வைத்து, பொதுமக்களுக்கு நீர்மோர், தர்பூசணி, இளநீர் மற்றும் கூல் டிரிங்க்ஸ் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். உடன் நிர்வாகிகள். புருஷோத்தமன், முகமது அப்துல் ரகுமான், அரிக்கிருஷ்ணன், அப்துல் நசீர். கருணாகரன், பழனி, கோகுல், மற்றும் ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!