கடலூர் மாவட்ட செய்தி துளிகள்!
நாள்:- .08.04.2025 (செவ்வாய்க்கிழமை)
👉.வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அலுவலர்கள் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
👉.கடலூர் மாவட்ட ஸ்போர்ட்ஸ் கராத்தே அசோசியேஷன் சார்பில் தேசிய கராத்தே நடுவர்களுக்கான பயிற்சி, தேர்வு திருப்பாதிரிப்புலியூரில் நடைபெற்றது. உலக கராத்தே நடுவர் ஹன்ஷி அல்தாப் கலந்து கொண்டார்.
👉.தமிழ்நாடு தனியார் சுயநிதி நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் நலச்சங்க செயலாளர் 3 ஆண்டுகளுக்கான கட்டணத் தொகையை வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு.
👉.கடலூர் வண்டிப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி பொது தேர்வு எழுதிய மாணவிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு.
👉.கடலூர் கே.கே நகரில் ஒருங்கிணைந்த நகர் நலச்சங்கத்தின் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
👉.போக்குவரத்து காவல்துறை சார்பில் விதிக்கப்படும் அபராதத்தை கண்டித்து காவல் S.P அலுவலகத்தில் திரண்ட ஆட்டோ ஓட்டுநர்கள், கூடுதல் பயணிகளை ஏற்ற அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை.
👉.குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையின் பிணவறையில் ஏ.சி இயந்திரம் பழுதடைந்ததால் இறந்தவர்கள் உடலை கடலூருக்கு கொண்டு செல்லும் அவல நிலை.
👉.காட்டுமன்னார்கோவிலில் உள்ள உடையார் குடியில் உள்ள மாரியம்மன் கோவிலில் பூச்செரிதல் விழா சிறப்பாக நடைபெற்றது.
👉.புவனகிரி அருகே கொத்தட்டை கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி. தனக்கென்று ஒதுக்கப்பட்ட நிலத்தில் குடியேற முடியாமல் இருப்பதால் தன்னை அங்கேயே புதைக்க வேண்டும் என ஆட்சியரிடம் கோரிக்கை.
👉.மகாவீர் ஜெயந்தி நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் நாளை மறுநாள் மூட வேண்டும் என ஆட்சியர் உத்தரவு.
👉.பண்ருட்டி அருகே பூங்குணத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தில் உள்ள 6 இரும்பு கதவுகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
👉.விருத்தாச்சலம் அருகே உள்ள வீரட்டிக் குப்பம் நடுத்தெரு பகுதியில் குடும்ப பிரச்சினை காரணமாக மதுவில் விஷம் கலந்து குடித்து சலூன் கடை தொழிலாளி உயிரிழந்தார்.
👉.திட்டக்குடி அருகே கள்ள நோட்டு அச்சடித்த வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் செய்து கைது செய்தனர். அவரிடம் இருந்த கார், லேப்டாப் பறிமுதல்.
👉.வீட்டுப் பயன்பாட்டு சமையல் கேஸ் சிலிண்டர் ரூ.50 உயர்வு இல்லத்தரசிகள் கொந்தளிப்பு.
👉.கடலூர் மாவட்டத்தில் வங்கிக் கணக்கில் ஆதார் எண்ணை இணைக்காததால் 1017 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதில் சிக்கல்.
👉.மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற வாராந்திர குறை தீர்ப்பு கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.
👉.சிதம்பரம் எல்லையம்மன் கோவில் தெருவை சேர்ந்த 8-ம் வகுப்பு படிக்கும் மாணவன் சைக்கிளில் உணவு வாங்க சென்ற பொழுது அரசு பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
👉.விருத்தாச்சலம் உதவி ஆய்வாளர் தலைமையில் காவலர்கள் ரோந்து பணியின் போது சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்த நபர்களை போலீசார் கைது செய்தனர்.
என்றும் மக்கள் பணியில் நிலவன் தொலைக்காட்சி
கருத்துகள்
கருத்துரையிடுக