புதுச்சேரி தொழில்துறை இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்ற ஸ்டார்ட் அப் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி!


புதுச்சேரி அரசு தொழில் மற்றும் வணிகத்துறை, வழிகாட்டுதலின் படி புதுச்சேரி தொழில்நுட்ப கல்லூரியில் இயங்கிவரும் அட்டல் இன்குபெஷன் சென்டர் மூலம் ஸ்டார்ட் அப் ஈகோசிஸ்டத்தை திறம்பட செய்துவருகிறது. இதன் அடிப்படையில் ஸ்டார்ட் அப் கவுன்சில் மூன்றாவது கூட்டம் தட்டாஞ்சாவடி தொழில்துறை இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்றது. அவ்வமையம் அட்டல் இன்குபெஷன் சென்டர் தலைமை நிர்வாக அதிகாரி. விஷ்ணு வரதன் அவர்கள் ஸ்டார்ட் அப் குறித்த விழிப்புணர்வு பற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றியும் மேலும் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய செயல்கள் குறித்தும் எடுத்துரைத்தார். 

இத்தருணத்தில் புதுவை அரசின் செயலர். ஆஷிஷ் மாதவராவ் மோரே (செயலர் சுற்றுசுழல் துறை),திரு. பி. டி. ருத்ர கௌடு (செயலர் தொழில்துறை), சந்திரகுமரன் (இணை தொழிலாளர் ஆணையர்), கோவிந்தராஜன் (பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம்), பி. முத்துகிருஷ்ணன் (இணை இயக்குனர் தொழில்நுட்பம்), சுந்தரமூர்த்தி (நிர்வாக இயக்குனர், அட்டல் இன்குபெஷன் சென்டர்) மற்றும் க. தனகோவிந்த் (உதவி இயக்குனர், தொழில்துறை) ஆகியோர் கலந்துகொண்டனர். முடிவில்,  எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை துரித படுத்துவதன் மூலம் உள்ளூர் இளைஞர்கள் இதன் பயனை அடைய முடியும் என வலியுறுத்தினேன்.

மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!