பண்ருட்டி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நுகர்வோர் பாதுகாப்பு குழு காலாண்டு கூட்டம் நகர மன்ற தலைவர் ராஜேந்திரன் பங்கேற்பு!
கடலூர் மாவட்டம்,பண்ருட்டி நகராட்சி அலுவலகத்தில் நுகர்வோர் பாதுகாப்பு குழு காலாண்டு கூட்டம் நகர மன்ற தலைவரும், நகர திமுக கழக செயலாளருமான க.இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நகராட்சி ஆணையாளர் பொறுப்பு கண்ணன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பைச் சார்ந்தவர்கள் மின்சாரம் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர் நுகர்வோர் அமைப்பின் சார்பில் உணவுப் பொருட்கள் பாதுகாப்பு திடக்கழிவு மேலாண்மை பிளாஸ்டிக் மேலாண்மை குடிநீர் மின்சாரம் கால்வாய் சுத்தம் உள்ளிட்ட பொதுநலன் குறித்து பல்வேறு கோரிக்கைகள் தெரிவிக்கப்பட்டன நகராட்சியின் சார்ந்த நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்படும் இதர துறை சார்ந்த கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்துக் கொண்டனர் உடன் சுகாதார அலுவலர் முருகேசன் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் கதிர்காமன் நகர அவைத் தலைவர் ராஜா பொருளாளர் ராமலிங்கம் மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் பரணிசந்தர் நகர மன்ற உறுப்பினர்கள் சண்முகவள்ளி பழனி ரமேஷ் நகராட்சி அமைச்சுப் பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்


கருத்துகள்
கருத்துரையிடுக