கடலூர் மாவட்ட செய்தி துளிகள்!

✍️.சேத்தியாதோப்பு அருகே கீழ் வளையமாதேவி பகுதியில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.

✍️.சிதம்பரம் சம்பந்தக்கார தெருவில் உத்ரபதீஸ்வரர் ஆலயத்தில் அமுது படையல் விழா நாளை மறுநாள் திங்கள்கிழமை நடைபெற உள்ளது✍️

✍️.தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா கடலூர் அடுத்த அபிஷேகப்பாக்கத்தில் நடைபெற்றது.

✍️.பண்ருட்டி முத்தாண்டிக்குப்பம் உதவி ஆய்வாளரின் தலைமையிலான காவலர்கள் ரோந்து பணியின் பொழுது நண்டுக்குழி என்னும் இடத்தில் கூழாங்கற்கள் கடத்தி வந்த லாரி பறிமுதல் கைது.

✍️.போக்சோ வழக்கில் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரை தொடர்ந்து விருத்தாச்சலம் மகளிர் காவல் ஆய்வாளர் மற்றும் ஏட்டு பணியிடை நீக்கம்.

✍️.கடலூர் சட்டமன்றத் தொகுதி திமுக சார்பில் மஞ்சக்குப்பம் புனித வள்ளலார் மேல்நிலைப் பள்ளியில் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 

✍️.கடலூர் மாவட்ட மைய நூலகத்தில் புத்தக தின விழா கொண்டாடப்பட்டது. 

✍️. கடலூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தட்டுப்பாடு இன்றி கிடைக்கும் வகையில் 2529 டன் உரம் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரி தகவல் 

✍️. கடலூர் தேவனாம்பட்டினத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

✍️.உலக மலேரியா தினத்தை முன்னிட்டு கடலூர் புதுப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள், மாவட்ட இளநிலை பூச்சியியல் நிபுணர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். 

✍️.சென்னை கிண்டி பயிற்சி நிறுவனத்தில் உயர் கல்வி மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதையொட்டி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உடனடி சேர்க்கை முகாம் மே மாதம் 5-ம் தேதி திங்கள்கிழமை துவங்குகிறது.

✍️.கடலூர் மாவட்டம் வேப்பூர் கூட்ரோடு பகுதியில் வேனில் சிக்கிய கருக்கலைப்பு மாத்திரைகள் உபகரணங்கள் இரண்டு பேர் குண்டர் சட்டத்தில் கைது.

✍️.காட்டுமன்னார்கோவில் அருகே திருமணமான 10 மாதத்தில் மனைவியை ஆயில் மில் உரிமையாளர் உயிரோடு தீ வைத்து கொளுத்திய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது. 

✍️.தமிழ்நாடு விளையாட்டு மேம்பட்ட ஆணையம் சார்பில் அண்ணா விளையாட்டு மைதானத்தில் கோடைகால பயிற்சி முகாம் நேற்று துவங்கியது. 

✍️.பண்ருட்டி அருகே அங்கு செட்டிபாளையம் அரசு பள்ளி ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

✍️.வக்பு திருத்த சட்ட மசோதாவை வாபஸ் பெறக் கோரி விருத்தாச்சலத்தில் இஸ்லாமியர்கள் தங்களது கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

✍️.விருத்தாச்சலம் அடுத்த கார் கூடல் ஏரி பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் கோ.பொன்னேரி அருகில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது கார் மோதியதில் நான்கு மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. 

✍️. 90 மின்விளக்குகள் பழுதானதால் கடந்த ஆறு மாதங்களாக இருளில் மேலக்குப்பம் கிராம மக்கள் மூழ்கிக் கிடக்கின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை.

✍️.பண்ருட்டி எல்.என்.புரம் பாரதி நகரில் சாலை ஓரத்தில் ரத்த காயங்களுடன் கடந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

✍️.சிதம்பரம் அண்ணாமலை நகர் திருவேங்கடம் பகுதியில் பழமை வாய்ந்த கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா நாளை மறுநாள் திங்கள்கிழமை துவங்குகிறது.

என்றும் மக்கள் பணியில் நிலவன் தொலைக்காட்சி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!