கடலூர் மாவட்ட செய்தி துளிகள்!
👉. பண்ருட்டியில் 258 கிலோ புகையிலை பொருள் கடத்திய முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
👉.கடலூர் முதுநகர் அடுத்த செம்மங்குப்பம் பகுதியில் டேங்கர் லாரி மீது வேன் மோதியதில் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
👉. ராமநத்தம் அருகே பெரங்கியம் கிராமத்தைச் சேர்ந்த நபரின் இரு சக்கர வாகனம் திடீரென தீ பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
👉.தொடர் விடுமுறையையொட்டி பிச்சாவரம், வெள்ளி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் ஏராளமாக குவிந்தனர்.
👉.மீன்பிடி தடைக்காலம் காரணமாக கடலூர் துறைமுகத்தில் மீன்கள் விலை வழக்கத்தை விட உயர்வாகவே உள்ளது.
👉.ஈஸ்டர் பண்டிகையையொட்டி கடலூர் ஆற்காடு லுத்தரன் திருச்சபையில் போதகர் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
👉.கடலூர் பேருந்து நிலையத்தில் நடைபாதை மிக மோசமாகியுள்ளதால் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு கடும் சிரமப்படுகின்றனர்.
👉.சேத்தியாதோப்பு சுற்று வட்டார பகுதியில் 30 க்கும் மேற்பட்ட ஆடுகளை திருடிய 4 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
👉.கடலூர் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் நலச்சங்கத்தின் பொதுக்குழு மற்றும் புதிய பொறுப்பாளர்கள் தேர்வு கூட்டம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
👉.பண்ருட்டி சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்த கட்டிட தொழிலாளி புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
👉.பண்ருட்டி அருகே காட்டு கூடலூர் பெரியார் நகரைச் சேர்ந்த நபர் பெரிய ஏரியில் குளித்த போது ஒன்பது நவகிரக சிலையை கண்டுபிடித்தார்.
👉. விருத்தாச்சலம் கொளஞ்சியப்பர் கோவிலில் ராஜ கோபுரங்கள் கட்டும் பணியை அமைச்சர் துவங்கி வைத்தார்.
👉.விளையாட்டு விடுதியில் சேர கடலூர் மாவட்ட மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
👉.குறிஞ்சிப்பாடி அருகே பெருமாள் ஏரியில் மரக்கன்று நடும் விழாவை முதன்மை மாவட்ட நீதிபதி பங்கேற்று துவங்கி வைத்தார்.
👉.சிதம்பரம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஆய்வாளரின் தலைமையிலான போலீசார் ரோந்து பணியின் போது சாராயம் விற்பனை செய்த நபரை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
👉.பண்ருட்டி அருகே திருத்துறையூர் கிராமத்தைச் சேர்ந்த நபர் மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்ற பொழுது லாரி மோதியதில் உயிரிழந்தார்.
👉.விளையாட்டு பயிற்சி முகாம் கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் வருகிற 25ம் தேதி முதல் மே 15ம் தேதி வரை நடைபெறுகிறது.
👉.சிதம்பரம் அருகே கில்லையில் இரயில்வே கேட் இரயில் வருவதற்காக மூடப்பட்டிருந்த போது அதிவேகத்தில் வந்த டிராக்டர் மோதியதில் இரயில்வே கேட் உடைந்தது.
என்றும் மக்கள் பணியில் நிலவின் தொலைக்காட்சி
கருத்துகள்
கருத்துரையிடுக