திருவள்ளூர் - தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் ஆலோசனை மற்றும் மாதாந்திர நாட்காட்டி வழங்கும் விழா!


திருவள்ளூர் மாவட்டம் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் திருவள்ளூர் , சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகிகள்  ஆலோசனை மற்றும் மாதாந்திர  நாட்காட்டி வழங்கும் விழா திருவள்ளூரில் நடைபெற்றது. 

நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் சா.அருணன் தலைமையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினர்களாக திருவள்ளூர் முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள். கோவிந்தராஜ் , தண்டபாணி, திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த கல்வி திட்ட கூடுதல் அலுவலர். பாலமுருகன், முதன்மை கல்வி அலுவலக பள்ளிகள் துணை ஆய்வாளர். 

குமரவேலன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். விழா முன்னிலை தலைமையாசிரியர்கள் , வெங்கடேசன், தியாகு, பரமானந்தம் , திருப்பதி, ஆகியோர் முன்னிலை வகித்தனர் மேலும் தமிழ்நாடு அரசு ஊழியரகள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் சட்ட ஆலோசகர்கள் பா.பிரபு,முனைவர் இ.என்.ஜான், ஸ்ரீதர், கா.எட்வின், அரசு வழக்கறிஞர் தியாகராஜன், திராவிட தேவன் ஆகியோர் மாதாந்திர நாட்காட்டியை வழங்க  கூட்டமைப்பு உருவாக்க ஆலோசனை வழங்கி துணை நின்ற ஓய்வுபெற்ற மூத்தவர்களான மகேந்திரன், ஜலாலுதீன், கந்தசாமி , 

ஜான்சன், வெங்கட்டாச்சலபதி, சூரிய பிரகாஷ் , மற்றும் ஆலோசகர் சீனிவாசன் பெற்றுக் கொண்டனர். அதனைத்தொடர்ந்து நிறுவனத் தலைவர் சா.அருணன் அவர்களிடம் ஒவ்வொரு மாநில மாவட்ட நிர்வாகிகள் துறைவாரியாக  நாட்காட்டியை பெற்றுக் கொண்டு சிறப்பித்தனர். முன்னதாக அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நீண்ட நாள் கோரிக்கையான புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருதல் , பகுதிநேர சிறப்பாசிரியர்கள் 12 ஆயிரம் பேரை பணி நிரந்தரம் செய்தல் , 2009 ஆண்டு பணியில் சேர்ந்த இடைநிலை 

ஆசிரியருக்கான சம வேலைக்கு சம ஊதியம் பெற்று தருதல் , ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் , பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களை சிறப்பு காலமுறை ஊதியத்தில் இருந்து காலமுறை ஊதியத்தில் கொண்டு வருதல் , அதேபோன்று ஊராட்சி செயலாளர், கிராம நிர்வாக அலுவலக உதவியாளர்களையும் சிறப்பு காலமுறை ஊதியத்தில் இருந்து காலமுறை ஊதியத்தில் கொண்டுவர வேண்டும், விளையாட்டுத் துறையில் அவுட் சோர்சிங் முறையில்  பணியாற்றும் அனைவரையும் காலமுறையில் ஊதியத்தில் 

கொண்டுவர வேண்டும் , அங்கன்வாடி ஊழியர்களை முழு நேர ஊழியர்களாக அங்கீகரிக்க கோருதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. திருவள்ளூர் , சென்னை , காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களை சேர்ந்த மாநில மாவட்ட பல்வேறு அணிகளின் பிரிவு நிர்வாகிகள் உள்ளிட்ட 300 மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர். இறுதியில் மாநில மகளிர் பிரிவு தலைவர். மகாதேவி நன்றி தெரிவித்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!