தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த வேல்முருகன் எம்எல்ஏ!


தமிழக வாழ்வுரிமைக் கட்சி வெளியிட்டிருந்த அறிக்கையின் அடிப்படையிலும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நான் அளித்திருந்த கவனயீர்ப்பு தீர்மானத்தின் அடிப்படையிலும் நேரமில்லா நேரத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களிடத்தில் நான் வைத்த கோரிக்கையின் அடிப்படையிலும் முல்லைப் பெரியாறு அணை குறித்து எம்புரான் மலையாளத் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக மாண்புமிகு முதல்வர் அவர்கள் அறிவித்துள்ளார் அவருக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் எனது நெஞ்சார்ந்த நன்றி. தமிழர்களின் மீதான கேரளத்தவரின் இது போன்ற வன்மம் தொடருமானால் தமிழகத்தில் செயல்படும் கேரள வணிக நிறுவனங்கள் முற்றுகை இடப்படும். தமிழ்நாடு முதல்வர் அவர்களின் அறிவிப்பின்படி மேற்படி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படாமல் திரையரங்குகளில் மேற்படி திரையிடப்படுமானால் தமிழ்நாடு முழுக்க திரைப்படம் வெளியிடப்பட்டுள்ள திரையரங்குகள் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினரால் முற்றுகையிடப்படும். எம்புரான் திரைப்படம் தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!