கடலூர் மாவட்ட செய்தி துளிகள்!
👉.கடலூரில் அடுக்குமாடி குடியிருப்பில் 272 பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு ஆணையை அமைச்சர் வழங்கினார்.
👉. சிதம்பரம் அருகே துணிசிரமேடு பகுதி பெட்ரோல் பங்கில் மது போதையில் வந்த இருவர் ஊழியரை தாக்கியதால் கைது செய்யப்பட்டனர்.
👉. விருத்தாச்சலம் அருகே அக்கம் பக்கம் வீட்டினருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் தாய், மகளை தாக்கியவர் கைது.
👉.திட்டக்குடி பகுதியில் நேற்று மாலை இடி மின்னல் கூடிய பலத்த மழை சூறாவளி காற்றினால் வீட்டின் கூறை தூக்கி வீசப்பட்டதால் பரபரப்பு.
👉.கடலூர் நவநீதம் நகரில் சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. அலகு குத்தி நேர்த்திக் கடன் செலுத்தினர்
👉. கடலூர் கம்மியம்பேட்டை பகுதியில் குப்பைகளை மர்ம நபர்கள் கொளுத்தியதால் அதிகளவு தீ பற்றியதால் தீயணைப்புத் துறையினர் வந்து தீயை அணைத்தனர்.
👉.கடலூரில் டாஸ்மார்க் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் 20 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
👉.கடலூர் புருகீஸ்பேட்டையில் சாலையோர வாய்க்கால் தடுப்பு சுவர் இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
👉.நெய்வேலி வேலுடையான்பட்டு சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா பக்தர்கள் காவடி பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
👉.கடலூர் மாவட்டம் நெய்வேலியில் வட்டம் 18-ஐ சேர்ந்த நபர் தபால் அலுவலகத்தில் நிரந்தர வைப்புத் தொகையை செலுத்துவதாக கூறி என்.எல்.சி ஊழியரிடம் 30 லட்சத்தை மோசடி செய்தவர் கைது.
👉.கடலூர் மாவட்ட பள்ளி சத்துணவு மையங்களில் உள்ள சமையல் உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தகவல்.
👉.திட்டக்குடி அசனாம்பிகை அம்மன் உடனுறை வைத்தியநாத சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு அபிஷேகங்களுடன் சுவாமி தீபாராதனை நடைபெற்றது.
👉.கடலூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் காவல் உதவி ஆய்வாளர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு வருகிற 16-ஆம் தேதி துவங்குகிறது.
👉.கடலூர் மாவட்டம் தென்னம்பாக்கம் அழகு முத்து அய்யனார் கோவிலில் சித்திரை திருவிழா நாளை மறுநாள் திங்கள் கிழமை நடைபெறுகிறது.
👉. கடலூர் மாவட்ட காவல் S.P அலுவல சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் காவல் S.P தலைமையில் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.
👉.கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுற்றி திரிந்த 1172 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் தகவல்.
👉.பண்ருட்டி அருகே 108 ஆம்புலன்ஸ் டிரைவர் மீது முன் விரோத பகையினால் தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.
👉.ஸ்ரீ முஷ்ணம் பூவராக சுவாமி ஆலயத்தில் கதண்டு கடித்து 20 பேர் காயமடைந்து ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
👉.கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் மேஜை பந்து விளையாட்டு பயிற்சி மையம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்குப் பயிற்சியாளர் மற்றும் மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.
👉.கடலூர் சட்டமன்றத் தொகுதி உட்பட்ட தூக்கணம்பாக்கத்தில் திமுக சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
👉.விருத்தாச்சலம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த பெண் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
என்றும் மக்கள் பணியில் நிலவரம் தொலைக்காட்சி
கருத்துகள்
கருத்துரையிடுக