கடலூர் மாவட்ட நீதித்துறை மற்றும் காவல்துறை சார்பாக நடைபெற்ற ஒருங்கிணைந்த கலந்தாய்வுக் கூட்டம்!
கடலூர் மாவட்டம், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின்பேரிலும், மேன்மைமிகு கடலூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி வழிகாட்டுதலின்பேரிலும் இன்று 16.04.2025 ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு கடலூர் மாவட்ட காவல் அலுவலகம் கூட்ட அரங்கில் கடலூர் மாவட்ட நீதித்துறை மற்றும் காவல்துறை சார்பாக ஒருங்கிணைந்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கடலூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர். P. நாகராஜன், M.A., M.L., கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார், IPS ஆகியோர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டியும், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் உள்ள தலைமறைவு குற்றவாளிகளை (NBW Accused) விரைந்து கைது செய்து, நீதிமன்றத்தில் வழக்குகளை நடத்தி முடிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. மேலும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளின் விசாரணைக்கு சாட்சிகளை விரைவாக முன்னிலைப்படுத்தி வழக்குகளை நடத்தி முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கருத்துரை வழங்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் கடலூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் . N. கோடீஸ்வரன்,P. நல்லதுரை, V. ரகுபதி, கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து குற்றவியல் நீதித்துறை நடுவர்கள், அரசு வழக்கு நடத்துமை துணை இயக்குநர், அரசு வழக்கறிஞர்கள், உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் அனைத்து காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக