இராஜபாளையத்தில் கோடை வெயில் தணிக்க பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல் திறந்து வைத்த தங்கப்பாண்டியன் எம்எல்ஏ!



விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தொகுதியில் இன்று (06.04.2025) காலை 10 மணியளவில் MLA தங்கப்பாண்டியன் அவர்களின்  ஏற்பாட்டில் இராஜபாளையம் தொகுதியில் தொடர்ந்து 8 வருடங்களாக கோடை வெப்பத்தை தணிக்கும் 

நோக்கில் தண்ணீர்ப்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது 9 வது வருடமாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டும், கோடை வெப்பத்தை தணிக்கும் பொருட்டு இராஜபாளையம் நகர் பகுதியான சாந்தி தியேட்டர் அருகில் 

மற்றும் பழைய பேருந்து நிலையம் அருகில் என இரண்டு இடங்களில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை *பாளையத்து பாண்டியர்* S.தங்கப்பாண்டியன் எம்எல்ஏ அவர்களும், நகராட்சி சேர்மன். பவித்ரா ஷியாம் 


அவர்களும்  திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி பழம், வெள்ளரி உள்ளிட்ட பழங்களையும் தண்ணீர் கேன்களையும் வழங்கினர். இந்நிகழ்வில்  நகர செயலாளர்கள். ராமமூர்த்தி, மணிகண்டராஜா, Ex.சேர்மன் 

சிங்கராஜ் ,பொதுக்குழு உறுப்பினர். கனகராஜ்,  துணை சேர்மன். கல்பனா குழந்தைவேலு, மாவட்ட மாணவரணி அமைப்பாளர். வேல்முருகன், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஒன்றிய, நகர, பேரூர்  கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!