கடலூர் மாவட்ட செய்தி துளிகள்!

👉.தமிழ் புத்தாண்டையொட்டி நேற்று கடலூர் பாடலீஸ்வரர் ஆலயத்தில் ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

👉.தென்னம்பாக்கத்தில் நடந்த சித்திரை திருவிழாவில் 108 நாதஸ்வர, தவில் வாத்தியங்களுடன் அழகுமுத்து ஐயனாருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. 

👉. கடலூர் மாவட்டத்தில் நீர் நிலைகளில் குளிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று காவல்துறை S.P அறிவுறுத்தல்.

👉.ஊ.மங்களம் காவல் துறை உதவி ஆய்வாளர் தலைமையிலான காவலர்கள் ரோந்து பணியின்போது என்.எல்.சி.க்கு சொந்தமான சாம்பலை அனுமதியின்றி லாரியில் ஏற்றிய 2 நபர்கள் கைது.

👉.திட்டக்குடி சார்பு நீதிமன்றத்தில் இளநிலை கட்டளை நிறைவேற்றுதல் பணி செய்து வரும் நபரை பெண்ணடத்தைச் சேர்ந்த நபர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததால் கைது.

👉.காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வடக்கு கொளக்குடியைச் பகுதியை சேர்ந்த 5 சிறுவர்கள், சிறுமிகள் வெள்ளியங்கால் ஓடையில் குளித்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

👉.டாக்டர் அம்பேத்கரின் 135-வது பிறந்த நாளையொட்டி கடலூர் மாவட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அம்பேத்கரின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

👉.கடலூர் வீர ஆஞ்சநேய ஆலயத்தில் லட்சதீப விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

👉.கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு மற்றும் தனியார் பேருந்தும் முந்திச் செல்லும் போட்டியில் அரசு பேருந்து கண்ணாடி உடைந்தது இதனால் கடலூர் பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு.

👉.கடலூர் மாநகராட்சி 24வது வார்டுக்கு உட்பட்ட கம்மியம்பேட்டையில் குப்பை கிடங்கை காலி செய்து ரூ.18 லட்சம் செலவில் ரேஷன் கடை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

👉.நகராட்சியில் இருந்து வெளியேறும் கழிவு நீர் கலப்பதால் விருத்தாச்சலம் மணிமுக்தாறு மினி கூவமாக மாறிவரும் அவல நிலை. 

👉.பெண்ணாடம் பேரூராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியில் இரவு நேர மின்தடையை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதனால் பரபரப்பு.

👉.கடலூரில் இருந்து சென்னை உள்ளிட்ட வழித்தடங்களில் 13 புதிய அரசு பேருந்துகள் இயக்கத்தை அமைச்சர் துவங்கி வைத்தார்.

என்றும் மக்கள் பணியில் நிலவன் தொலைக்காட்சி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!