புவனகிரி திமுக கழக இளைஞர் அணி சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து நடைபெற்ற மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்!


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின்  அவர்களின் உத்தரவின்பேரில், கழக இளைஞர் அணிச் செயலாளர் - மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர். உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலில், புவனகிரி சட்டமன்ற தொகுதியில், கழக இளைஞர் அணி சார்பில், ஒன்றிய அரசைக் கண்டித்து, மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், திராவிட இயக்க எழுத்தாளர் வே.மதிமாறன் அவர்களும், கழக இளம் பேச்சாளர் R.கோமதி அவர்களும் பங்கேற்று, மும்மொழிக் கொள்கையின் மூலம் இந்தித் திணிப்பு, ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயரை முற்றிலுமாக புறக்கணித்து நிதிப் பகிர்வில் பாரபட்சம், தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாட்டிற்கு அநீதி எனத் தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்தும், திராவிட மாடல் அரசின் நான்காண்டு சாதனைகளை மக்களிடம் விளக்கியும் உரையாற்றினர். 

தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! என்ற கழகத் தலைவர் அவர்களின் உரிமைக் குரலுக்கு வலுசேர்க்கும் வகையில் இந்த கூட்டம் அமைந்தது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!