பண்ருட்டி அருகே கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக கடாம் புலியூர், முத்தாண்டி குப்பம் காவல் நிலைய பகுதிகளில் உள்ள முந்திரி தோப்புகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட காவலர்கள்.

கடலூர் மாவட்டம், கடலூர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் .S.ஜெயக்குமார் IPSஅவர்களின் உத்தரவின்பேரில், பண்ருட்டி துணை காவல்கண்காணிப்பாளர். P. N. ராஜா, மதுவிலக்கு அமல் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர். G. பார்த்திபன்ஆகியோர்கள் தலைமையில் காவல்ஆய்வாளர்கள்.வேலுமணி,நந்தகுமார், அசோகன், பாலாஜி, 10 உதவி ஆய்வாளர்கள் மற்றும் பண்ருட்டி உட்கோட்டகாவலர்கள், மதுவிலக்கு அமல் பிரிவு காவலர்கள், ஆயுதப்படைகாவலர்கள் இணைந்து சாராயம் காய்ச்சுதல் மற்றும் விற்பனை தடுப்பு சம்பந்தமாக காடாம்புலியூர், முத்தாண்டிக்குப்பம் காவல் நிலைய பகுதிகளில் உள்ள முந்திரி தோப்புகளில் 6 ஆறு குழுக்களாக பிரிந்து 6 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட பகுதிகளில் அதிரடி தேடுதல் வேட்டை காலை 7 மணி முதல் 08.30 மணி வரை மேற்கொண்டனர். மேலும் கிராம மக்களிடம் சாராயம் காய்ச்சுவது மற்றும் விற்பனை செய்வது தெரிந்தால் பொதுமக்கள் காவல்துறையிடம் தகவல் தெரிவிக்குமாறும், தகவல் தெரிவிப்பரின் விவரம் ரகசியம் காக்கப்படும் என விழிப்புணர்வு ஏற்படுத்தி காவல் அதிகாரிகளின் செல்போன் எண்களை பொதுமக்களிடம் அளித்தனர்.

கடலூர் மாவட்டத்தில் சாராயம் காய்ச்சுவது, சாராயம் விற்பனை செய்யும் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . S. ஜெயக்குமார் IPS அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!